தனுஷ் என் மகன் என மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு..!
கதிரேசன், மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் என கூறி மேலூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
தனுஷின் மனுவை ஏற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் , மீனாட்சி தம்பதி தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்து உள்ளனர்.
அந்த மனுவில் தனுஷ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிறப்புச் சான்று போலியானது போலியானது என கூறி மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தோம் என கூறியிருந்தனர். மேலும் இந்த வழக்கை கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நான்கு வார காலத்திற்கு பிறகு விசாரணையை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.