மகளிர் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக – சென்னை மகளீர் சிறப்பு நீதிமன்றம்
பெண்கள் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வெளியில் சென்றாலே பாதுகாப்பு என்பது இல்லை என்பதை தான் உணர்கின்றனர். பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் நாள்தோறும் பெண்கள் ஏதாவது ஒரு வன்கொடுமைக்கு ஆளாகும் செய்தி நமது காதுகளுக்கு எட்டிய வண்ணம் தான் உள்ளது.
அதேபோல் காதலிக்க மறுக்கும் பெண்களுக்கு எதிரான தாக்குதலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய வழக்கில் அரவிந்த்குமார் என்பவருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்த நிலையில், பெண்கள் மீதான தாக்குதல் குறித்து பேசிய நீதிபதி, பெண்கள் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், இந்த தாக்குதல் சம்பவங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது என்றும், பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இதுபோன்ற சம்பவங்களை சகித்து கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.