ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம்..!

Default Image

காங்கிரஸ் கட்சி வேட்பாளர், ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இந்த நிலையில், அங்கு தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுவதோடு, வாக்கு சேகரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம் 

அதே சமயம், இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து கட்சி மற்றும் நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, மாலை 6 மணிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் யாரும் தேர்தல் நடைபெறும் தொகுதியில் இருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள்ளது.

முதல்வர் பரப்புரை 

இந்த நிலையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று, காங்கிரஸ் கட்சி வேட்பாளர், ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்