இரட்டை இலைக்கு ஆதரவு.! ஓபிஎஸ் அறிவிப்பு.! பாஜகவின் ஒற்றுமை ஆலோசனை வெற்றி பெற்றதா.?

Default Image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இதுவரை நிகழந்த அடுத்தடுத்த நகர்வுகளை இந்த குறிப்பில் சுருக்கமாக காணலாம். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நேரம் நெருங்க நெருங்க அரசியல் களத்தில் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது. நாளுக்கு நாள் ஒவ்வொரு திருப்புமாக அரங்கேறி வருகிறது.

ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவேராவின் தந்தையுமான இவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர்கள் தங்களது தேர்தல் பரப்புரை பணிகளை படுவேகமாக செயல்படுத்தி வருகின்றனர். அதற்கு நேர்எதிரே எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பாஜக கூட்டணி தனித்தனியே தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என இரு பிரிவுகளாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர்.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று, நீங்கள் அதிமுக பொதுக்குழுவில் உள்ள உறுப்பினர்களை கேட்டு அதிமுக சார்பாக ஒரே ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு விட்டனர்.

இதற்கிடையில் பாஜகவானது தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காமல் ஆலோசனை செய்து கொண்டிருந்தது. மேலும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினரையும் சந்தித்து ஆலோசித்து வந்தனர். மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில் கூட, இபிஎஸ் ஓபிஎஸ் இருதரப்பும் ஒன்று சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும். திமுக போன்ற பலமான கட்சி எதிர்க்க அதற்கு நிகரான வேட்பாளரை நிறுத்தி ஒரு சேர வெற்றி பெற வேண்டும் என்று தான் பேசி இருந்தார்.

அதற்கேற்றார் போல இருவரையும் சந்தித்து ஆலோசித்து வந்தார். இந்த சந்திப்பிற்கு பலன் கிடைத்ததோ என்னவோ தெரியவில்லை, நேற்று ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஓர் அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் இரட்டை இலை சின்னத்திற்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம் என்றும்,  அதிமுகவின் அமைப்பு செயலாளராக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செந்தில் முருகன் (ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்

இது மறைமுகமாக அனைவரும் ஒன்று சேர ஓ.பன்னீர் சொல்வம் தூது விடுகிறாரா அல்லது பொதுக்குழு உறுப்பினரிடம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அதிகமாக இருப்பதன் கள நிலவரத்தை ஆய்வு செய்து இவ்வாறு முடிவு எடுத்தாரா என்பது தெரியவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை வேட்பாளராக அறிவித்து விட்டனர். அவர்களுக்கு ஆதரவை கேட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி பொதுக்குழு உறுப்பினர்களிடம் அனுமதி கடிதமும் வாங்க சுற்றறிக்கை அனுப்பிவிட்டனர். இதன் காரணத்தால் அதிமுக வேட்பாளராக தென்னரசு தான் இருப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதனை எடுத்து நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. கூட்டணி தர்மத்தின் படி அதிமுக பெரிய கட்சி ஆதலால் அவர்கள் போட்டியிட உள்ளனர். எங்கள் ஆதரவு இரட்டை இலைக்கு. இபிஎஸ் வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓபிஎஸிடம் கேட்டோம். அவர்கள் அதற்கு சில நிபந்தனைகளை கூறியுள்ள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.  அடுத்தடுத்த நாட்களில் நிலை தேர்தல் களநிலவரத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதையும், யார் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்