மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது-பன்னீர்செல்வம்
மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் பருவ மழை பொய்த்துவிட்டதால், குடிநீர் பற்றாக்குறை தான் ஏற்பட்டுள்ளதே, தவிர குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை.மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது .
டெல்டா பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வார மத்திய அரசிடம் ரூ17,600 கோடி கேட்கப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய அரசு கூறியுள்ளது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.