குட்நியூஸ்…சென்னையில் வைஃபை மற்றும் குடிநீர் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கழிப்பறைகள்!
சென்னையில் வைஃபை மற்றும் குடிநீர் வசதியுடன் கூடிய நவீன கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளன.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகரம் முழுவதும் 62 இடங்களில் நவீன பொதுக் கழிப்பறைகளை(ஸ்மார்ட் டாய்லெட்களை) கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக, குடிமை அமைப்பு(EIA) அக்டோபர் கடைசி வாரத்தில் ஏலதாரர்களிடமிருந்து விண்ணப்பத்தை அழைத்துள்ளது.பொது-தனியார் கூட்டு முறையில் இந்த ஸ்மார்ட் டாய்லெட்கள் கட்டப்பட்டு, இயக்கப்பட்டு,பராமரிக்கப்படவுள்ளது.
குறிப்பாக,ஸ்மார்ட் டாய்லெட்களில் வை-பை (Wi-Fi), குடிநீர், அருகிலேயே ஏடிஎம்கள், சானிட்டரி பேட் வென்டிங் மெஷின்கள், சூரிய ஒளி மின்னழுத்த கூரை பேனல்கள் மற்றும் விளம்பரத்திற்கான வணிக இடங்கள் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்(TNIE)செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இஐஏ ஆவணத்தின்படி,கழிவறைகள் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு தடையில்லா நீர் விநியோகத்துடன் இருக்கும்.மேலும்,பிற வசதிகளான ஆட்டோமேட்டிக் ஃப்ளஷ், எல்.ஈ.டி குறிகாட்டிகள்,பயனர்கள் தங்கியிருக்கும் நிலையைத் தெரிவிக்கும் மற்றும் ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தியில் டிஸ்ப்ளே போர்டுகள் ஆகியவை அடங்கும். இத்திட்டத்தை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், கழிவறைகளை பராமரிக்க போதுமான பணியாளர்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில்,”சென்னையில் ஏற்கனவே 7,300 இருக்கைகள் கொண்ட 800 சாதாரண கழிப்பறைகள் உள்ளன. இதுதவிர, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், நகரம் முழுவதும் அமைக்கக்கூடிய,நிலைத்திருக்கும் மற்றும் மாற்று பொது கழிப்பறை மாதிரிகள் தேவை”,என, மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும்,தற்செயலாக,அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட நவீன கழிப்பறைகள் செயல்படாமல் போனதால், பெரும்பாலானவை தற்போது செயல்படாமல் உள்ளன.ஆனால், இம்முறை குறைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் வணிக ரீதியிலான காட்சி இடம் ஒதுக்குவதாகவும்,
மேலும்,இது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் கார்ப்பரேட் நிறுவனங்களை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கும். கூடுதல் பணம், கழிவறைகளை சிறப்பாக பராமரிக்க குடிமை அமைப்புக்கும் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.அதன்படி,
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பள்ளிக்கரணை, அடையாறு, சோழிங்கநல்லூர் போன்ற முக்கிய பகுதிகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.
சில பிரபலமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:
- உயர்நீதிமன்றம் மின்ட் பேருந்து நிலையம்
- பிராட்வே பேருந்து நிலையம்
- அம்பத்தூர் தொழிற்பேட்டை
- Bougainvillea பூங்கா
- ஆற்காடு சாலை பூங்கா
- ஈசிஆர்(ECR) – (CMWSSB கிணறு அருகில்)
- ஓஎம்ஆர்(OMR)- (CMWSSB அலுவலகத்திற்கு எதிரே).