சூப்பர்…சிறப்பாக செயல்படும் 3 விடுதிகளுக்கு ரூ.7,80,000 மதிப்பில் பரிசுகள் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
சென்னை:தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் 3 விடுதிகளுக்கு பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் படி, ஆண்டு தோறும் மாவட்ட அளவில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் சிறந்த மூன்று விடுதிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
“2021-2022 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் மானியக் கோரிக்கையின் போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.
“மாநிலம் முழுவதும் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகள் சிறப்பாக செயல்படுவதை ஊக்கப்படுத்தும் வகையில்,ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் சிறந்த 3 விடுதிகளை தேர்வு செய்து ரூபாய் ஏழு இலட்சத்து எண்பதாயிரம் செலவில் பரிசுகள் வழங்கப்படும்”, என்று அறிவித்தார்.
அதன்படி,தற்போது,தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் சிறந்த 3 விடுதிகளை தேர்வு செய்து ரூபாய் ஏழு இலட்சத்து எண்பதாயிரம் செலவில் பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.