“அதிமுக வை ஆக்கிரமித்த சன் டிவி ” நியூஸ் ஜெ அடுத்த கட்டத்துக்கு செல்லுமா..!!
நியூஸ் ‘ஜெ’ ‘சன் டி.வி’.ஆட்களால் ஆக்கிரமிப்பு
வேலைகள் வேகம் எடுத்து ஒரு வழியாய் அவர்களின் கனவு நிறைவேறி உள்ளது. நியூஸ் –ஜெ என பெயரிடப்பட்டுள்ள அந்த டிவி தனது ஆரம்பகட்ட பயணத்தை கடந்த 12ம் தேதி தொடங்கி இருக்கிறது. அந்த டிவியின் இணைய தளம் அன்றைய தினம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இதனை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த கோலாகல விழாவில் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஒரு காலத்தில் சன் டிவி செய்திகளில் கோலோச்சிய நிர்மலா பெரியசாமி.
முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது தனது ஏற்ற இறக்க குரல் வளத்தால் அவரை காய்ச்சி எடுத்தவர் இவர். நியூஸ்-ஜெ.டிவியில் நிர்மலாவுக்கு முக்கிய பங்கு இருக்கலாம் எனக்கூறப்படும் நிலையில், அந்த டிவியின் பிரதான பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் சன் டிவியின் முன்னாள் ஊழியர்கள் தானாம்.
நியூஸ்-ஜெ.டி.வியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, முன்பு சன் டிவியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். கலாநிதி மாறனின் கிளாஸ்மேட். நியூஸ்-ஜெ.தலைமை செய்தி ஆசிரியராக இருக்கும் திருவும் சன் டிவியின் வார்ப்பே. அவருக்கு அடுத்த நிலையில் உள்ள செய்தி ஆசிரியர்கள் அரவிந்தன், கோபி ஆகியோரும் சன் டிவி ஆட்கள் தான்.