மாணவர்களுக்கு இன்று முதல் ஜாலி தான்…தொடங்குகியது கோடை விடுமுறை.!
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
இந்த ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வை விரைந்து முடிக்க கல்வித் துறை திட்டமிட்டு, அதன்படி தேர்வு நடைபெற்றது. முன்னதாக, கடந்த 12-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாக இருந்தது.
கல்வித் துறை மாற்று தேதியின்படி, மக்களவை தேர்தல் முடிந்ததும், 22 மற்றும் 23-ம் தேதி நேற்றுடன் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடந்து முடிந்தது. ஏற்கனவே, 1 முதல் 2ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
நேற்றுடன், அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவுற்ற நிலையில், இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜூன் 4 தேர்தல் முடிவு, வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தனியார் பள்ளிகளில் 1-9ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மேலும் ஒருவாரம் விடுமுறையை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.