சூப்பர்…! நாளையோடு தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு நாளையோடு மொத்தமாக கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதியும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதியும் நிறைவடைந்தன.
அதனைத் தொடர்ந்து, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களின் இறுதித் தேர்வுகளையும் 28ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, நாளையோடு தேர்வுகள் முடிவடைந்து அனைவருக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது.
முன்னதாக, தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியது. அதாவது, கொரோனா பரவல், கோடை வெயில் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்க இருந்த தேர்வுகளை ஏப்ரல் 17ஆம் தேதி என மாற்றி முன்கூட்டியே நடத்த திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.