எம்மாடியோ….வெப்பத்தை தணிக்க வருகிறது கோடை மழை.!
TN Rain: இன்னும் ஏப்ரல், மே மாதம் கூட தொடங்கவில்லை அதற்குள் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், வெப்பத்தை தணிக்க வருகிறது கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
READ MORE – முதல் நாளே கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்…தேர்தல் விதிகள் அமலுக்கு பின் போலீஸார் அதிரடி.!
மேலும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
READ MORE – நிவாரணத் தொகை என்பது பிச்சை…ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி ஆளக் கூடாது – நிர்மலா சீதாராமன்.!
வருகின்ற 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, 23ம் தேதி தமிழகம், புதுவை நிலவக்கூடும். மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.மீனவர்களுக்கு எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை.