முடிந்தது கோடை விடுமுறை … இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு !!

Published by
அகில் R

தமிழகம்: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறந்துள்ளன.

வருடம்தோறும் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு, 1 மாதத்திற்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானதால், பள்ளிகள் ஜூன் 6ம் தேதி அன்று  திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை முதலில் அறிவித்து இருந்தது.

அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் வெப்ப அலை வீசியதன் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தது பள்ளிக்கல்வி துறை.

பள்ளி இறுதித்தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டது. புதிய கல்வி ஆண்டில், ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், இன்றைய நாள் ஜூன்-10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒன்றரை மாத கோடை விடுமுறை முடிவடைந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், முதல் நாளில், அனைத்து மாணவர்களுக்கும் உளவியல் ரீதியான கவுன்சிலிங் பாடம் வழங்கவும் அந்தந்த பள்ளிகள் ஏற்பாடு செய்து உள்ளன.

Published by
அகில் R

Recent Posts

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

43 minutes ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

2 hours ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

2 hours ago

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

10 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

12 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

14 hours ago