இன்று முதல் ஜூன் 2 வரை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று முதல் (மே 1ம் தேதி) ஜூன் 2 தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வாரந்தோறும், திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .வழக்குகள் மீது புதன், வியாழக்கிழமைகளில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் 16 நீதிபதிகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 12 நீதிபதிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.