பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு அடுத்த நாள்… சந்தீப் கோஷ் செய்த திடுக்கிடும் செயல்.?

பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு அடுத்த நாள் சந்தீப் கோஷ் கல்லூரி வளாகத்தில் ஓர் கட்டட பணிக்கு அனுமதி அளித்துள்ளார் என பாஜகவை சேர்ந்த சுகந்தா மஜூம்தார் குற்றம்சாட்டியுள்ளார். 

Former RG Kar Hospital dean Sandip Ghosh

கொல்கத்தா : கடந்த மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனையில்  31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் ராய், சிபிஐ வழக்கு விசாரணை வளையத்தில் இருக்கிறார்.

சந்தீப் ராய் மீது அதே கல்லூரியில் உரிமை கோரப்படாத உடல்களை சட்டவிரோதமாக கடத்திய புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு அந்த புகாரில் சிபிஐ அதிகாரிகளால் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படியான சூழலில் சந்தீப் கோஷ் மீது ஒரு பரபரப்பு குற்றசாட்டை பாஜக நிர்வாகி சுகந்தா மஜூம்தார் முன்வைத்துள்ளார்.

அதாவது, பயிற்சி மருத்துவர் படுகொலை நடந்ததாக கூறப்படும் நாளுக்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 10ஆம் தேதி , ஒரு கருத்தரங்கு கட்டுமான பணிக்கு சந்தீப் கோஷ் அனுமதி அளித்துள்ளார். அந்த கட்டடமானது பயிற்சி மருத்துவர் கொலை நடைபெற்றதாக கூறப்படும் இடத்திற்கு அருகே அமைந்துள்ளது என பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், படுகொலை நடந்த மறுநாளே சாட்சியங்களை அழிக்கும் நோக்கில் கருத்தரங்கம் இடிக்கப்பட்டது என்பதை இந்தக் கடிதம் உறுதிப்படுத்தியுள்ளது. மாநில சுகாதார அமைச்சர் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அறிவுறுத்தல்கள் இல்லாமல் இதுபோன்ற செயல்கள் நடந்திருக்காது.” என்ற குற்றசாட்டையும் பாஜக நிர்வாகி சுகந்தா மஜூம்தார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுகந்தா மஜூம்தார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள, சந்தீப் கோஷ் உத்தரவிட்டதாக கூறப்படும் கடிதத்தில்,  “கொல்கத்தாவின் ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் பல்வேறு துறைகளில் பணியில் இருக்கும் மருத்துவர்களின் அறைகள் மற்றும் தனித்தனி கழிப்பறைகளில் கட்டிட குறைபாடுகள் உள்ளன என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவர்களின் கோரிக்கையின்படி உடனடியாக சேதமடைந்துள்ள பகுதிகளை சீர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கு வங்க அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலர் மற்றும் மேற்கு வங்க அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் இயக்குநர் ஆகியோருடன் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தப் பிரச்சினை ஏற்கனவே விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளது. ” என்று ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு குறித்து பெற்றோருக்கு ஆர்.ஜி கர் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கையில், “பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார்” என்று தான் கூறப்பட்டது. அதே போல பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை கொல்கத்தா காவல்துறையினர் கையாண்ட விதம் குறித்து மாநில உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர் என்பதும் குறிப்பிடதக்கது. இப்படியான சூழலில் பாஜக நிர்வாகி எழுதிய இந்த கடிதம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்