சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி
சுஜித்தின் பெற்றோருக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் ஸ்டாலின்.
சுஜித் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மு.க ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.பின் சுஜித்தை இழந்து வாடும் பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி தம்பதிக்கு மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஸ்டாலின்.அப்பொழுது அவர் கூறுகையில், மீட்பு பணியை பொறுத்தவரை, அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது. 36 அடி ஆழத்தில் இருந்தபோதே, குழந்தையை மீட்டிருக்க முடியும்.
பேரிடர் மீட்பு படையை உடனடியாக அழைத்திருக்க வேண்டும். இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.