எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது- பிரேமலதா விஜயகாந்த்

எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது .
குறைசொல்வதை விட இதை பாடமாக எடுத்துக்கொண்டு இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இறப்பில் கூட திமுக அரசியல் செய்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.