சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம் – விஜயகாந்த்

சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் உயிரிழந்தான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறுகையில்,சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம்.இதுபோன்றதொரு மரணம் மீண்டும் நிகழாவண்ணம் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிக்க பயன்படுத்த வேண்டும் அல்லது மூடி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025