சுஜித் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் முதலமைச்சர்
சுஜித் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூற செல்ல இருக்கிறார் முதலமைச்சர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 80 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வந்தனர்.ஆனால் நேற்று இரவு 10 மணிக்கு மேலாகவே சிறுவனின் உடல் சிதைந்து துர்நாற்றம் வீசியதாக தெரிவிக்கப்பட்டது.இதனையயடுத்து குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இறுதியாக சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் சுஜித் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூற செல்ல இருக்கிறார் முதலமைச்சர்.இன்று பிற்பகல் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று ஆறுதல் கூற இருக்கிறார் முதலமைச்சர்.