ஆழ்துளைக் கிணற்றில் அசைவின்றி குழந்தை சுஜித் ..! மண் முடியிருப்பதால் குழந்தை மீட்பு பின்னடைவு..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். அந்த சிறுவனை மீட்பு படையினர் 17மணி நேரத்திற்கு மேலாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் உள்ள சிறுவன் சுஜித் அசைவின்றி முகம் , கைகளில் மண்ணில் மூடப்பட்டிருக்கிறது. இதனால் இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றி விட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண் முடியிருப்பதால் குழந்தை மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.