சுஜித் மீட்புக்கு செலவான உண்மையான தொகை இதுதான்- மாவட்ட ஆட்சியர்

Default Image

சுஜித்தை மீட்க ரூ.11 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தான்.இந்த  சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது முதல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலிச் செய்திகள் அதிகம் உலாவி வருகின்றது.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு சிறுவன் நடனம் ஆடும் வீடியோ வெளியானது.அந்த வீடியோவில் உள்ள சிறுவன் சுஜித் என்றும் அதிகம் பகிரப்பட்டு வந்தது.ஆனால் அந்த வீடியோவில் வரும் சிறுவன் சுஜித் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் மற்றுமொரு போலிச்செய்தி  அதிகம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதாவது சுஜித்தை மீட்க ரூ.11 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி வந்தது.ஆனால் இந்த செய்தியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,சுஜித்தை மீட்க உதவிய வாகனங்களுக்கு வாடகை வேண்டாம் என்று அதன் உரிமையாளர்கள் தெரிவித்துவிட்டனர். ஆனால் மீட்பு பணியில் ஈடுபட்ட வாகனங்களுக்காக 5000 லிட்டர் டீசல் செலவு செய்யப்பட்டது.மற்ற செலவுகள் ரூ.5 லட்சம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று போலிச் செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்