ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை..! மேலும் ஒருவர் உயிரிழப்பு…!

ஆன்லைன் ரம்மியால் சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 41 வயதான தினேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் தங்களது பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், தங்களது உயிரையும் துச்சமென கருதி இழக்கின்றனர். இதனால் அவர்களது குடும்பங்கள் தான் பாதிப்புக்குள்ளாகிறது.
அந்த வகையில், கடந்த வாரம் தான் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த வடு மறைவதற்குள், இன்று காலை சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 41 வயதான தினேஷ் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் பணத்தை இழந்து கடனாளி ஆகி உள்ளார். இதனால் என்ன செய்வது என்று அறியாமல், அவர் கடனை திருப்பி செலுத்த இயலாததால் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். இந்த சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025