நீட் தேர்வால் பெரம்பலூர் மாணவி தற்கொலை !
பெரம்பலூர் அருகே தீரன் நகரை சேர்ந்த செல்வராஜ், சுசிலா தம்பதியின் மகள் கீர்த்தனா இவர் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1056 மதிப்பெண்கள் வாங்கி உள்ளார்.
நீட் தேர்வுகாக சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
பின் நடந்த நீட் தேர்வில் கீர்த்தனம் 352 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஒரு மாத காலமாக கீர்த்தனா மன உளைச்சலில் இருந்ததாகவும் இன்று பெற்றோர்கள் வெளியில் சென்ற நிலையில் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.