அரளிவிதையை அரைத்து தற்கொலை முயற்சி.! தன் குழந்தைக்கே எமனான தாய்..!

Default Image

பெரியகுளம் அருகில் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம் சேர்ந்த வீரபத்திரன் இவரின் மனைவி சுமதி.இவர்களுக்கு 4 குழைந்தைகள் உள்ளன. இதில் முதல் இரண்டுமே பெண் குழந்தைகள், அடுத்த இரண்டு குழந்தையும் 3 வயது மற்றும் 5 மாத ஆண் குழந்தைகளும் ஆகும். சுமதி கணவருக்கு தெரியாமல் ரூ.50000 கடன் வாங்கியதால் கணவருக்கும் மனைவிக்கும் இடையே சில நாட்கள் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சுமதி  நேற்று இரவு சுமதி அரளி விதை அரைத்து பாலில் கலந்து கொடுப்பதற்காக வைத்திருந்தார். அந்நேரத்தில் அப்பகுதியில் உள்ள அவரது உறவினர்கள் சுமதியின் வீட்டிற்கு வந்து அழைக்கும் போது வெளிய சென்றார்.
அந்தநேரத்தில் குழந்தை அழுவதை பார்த்து அவருடைய 6 வயது பெண் குழந்தை தம்பிக்கு அம்மா பால் தான் வைத்திருக்கிறார்கள் என்று எடுத்து நினைத்து கொடுத்துவிட்டார். இந்நிலையில் சுமதி வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது அரைத்து வைத்து அரளி விதையின் விஷ பால் தான் கொடுக்கப்பட்டியிருக்கு என தெரிந்து குழந்தையின் தாய் அலறி அழுதுள்ளார்.
பின்னர் சுமதியின் தங்கை அரைத்து வைத்திருந்த பாலை கொடுத்ததால்தான் குழந்தை ஒரு மாதிரி இருக்கு என்று குழந்தையை தூக்கிக்கொண்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மிகவும் கடினமான நிலையில் குழந்தை இருக்கு அதனால் மேல் சிகிச்சைக்காக தேனீ அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறினார்கள். பின்னர் அங்கு சென்று சிகிச்சைப்  பலனின்றி நேற்று இரவு குழந்தை உயிரிழந்தது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque
Tamilnadu CM MK Stalin
Indian stock market down