இன்னும் 3 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், சுமார் 10 லட்சம் குடும்பத்தினர் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்துள்ளனர். இவர்களுக்கு அரிசி வழங்கப்படுவதில்லை. இவர்களுக்கு மேலும் சில நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்ததால், சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது.
இதன் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டு கடந்த 19ஆம் தேதி முதல், இன்று (26-11-2019) வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் தற்போது வரை 1 லட்சம் பேர்தான் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர்.
அதனால் தற்போது கால அவகாசத்தை 26ஆம் தேதியிலிருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு அதாவது 29 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இதுவரை சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்றிக்கொள்ள ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவிப்பினையில் வெளியிட்டுள்ளது.