திடீரென 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல – தினகரன்
திடீரென 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துகல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்,தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பொது தேர்வு நடைபெறும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில் திடீரென 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல. மேலும் பெருந்தொற்று நோயால் அனைவரும் உளவியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் நேரத்தில் இத்தேர்வுகளை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம்.
அதுவரை பொதுத் தேர்வினை தள்ளிவைத்துவிட்டு, நோயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருதிலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பணிகளைச் செய்வதிலுமே அரசு எந்திரத்தின் முழுகவனமும் இப்போதைக்கு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில் திடீரென 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல. @CMOTamilNadu #10thExams
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 12, 2020