ஆய்வின் போது திடீரென யோகா பயிற்சி செய்து அசத்திய அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!-மருத்துவர்கள் பாராட்டு..!

Default Image
  • சித்த மருத்துவமனையின் கட்டளை மையத்தை திறந்து வைத்த பின்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீரென யோகா செய்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான கட்டளை மையம் திறந்து வைக்கப்பட்டது. இதனை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனையை மேற்பார்வையிட ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள இயற்கை சிகிச்சை பிரிவு மையத்தில் திடீரென்று யோகா செய்து காட்டினார். யாரும் எதிர்பாராதவண்ணம் இவர் யோகா செய்தது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அங்குள்ள மருத்துவர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

அதன் பின்னர் பேசிய அமைச்சர், தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி போன்ற 69 மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கொரோனாவிலிருந்து 27,250 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சித்த மருத்துவமுறையை அதிகரிப்பதன் மூலம் பழமை வாய்ந்த சித்த மருத்துவ முறையை மேம்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும், தென் சென்னையில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் சென்னை கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பன் நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். அதன் பின்னர், சித்த மருத்துவம் குறித்த சந்தேகங்களை பற்றி தெரிந்துகொள்ள 73587-23063 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்