தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,அரசு பள்ளிகளில் 1 முத்த 3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும்,திட்டம் தொடர்பான கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றையும் முதல்வர் வெளியிட்டார்.அதுமட்டுமல்லாமல்,ஆசிரியர் கையேடு, சான்றிதழ்,கற்றல் கற்பித்தல் உபகரணம்,புத்தகங்கள் ஆகியவற்றையும் வழங்கினார்.இதன்பின் இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,”கற்பிப்பததில் புதிய யுக்தி தேவை என்பதால் தான் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் 2025-க்குள் அடிப்படை எழுத்தறிவு,எண்ணறிவை பெற வேண்டும் என்பதே நோக்கம்.தொடக்க பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு எண்ணும் எழுத்தும் தோட்டம் தொடங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பாடத்திற்கும் தனி தனி குழுக்கள் அமைக்கப்பட்டு,இந்த திட்டத்தை செழுமைப்படுத்துவார்கள்.கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை குறைக்கும் வங்கியில் இத்திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது”,என்று கூறினார்.
இந்நிலையில்,திருவள்ளூர் வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது,10 ஆம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து தமிழ் ஆசிரியை பாடம் நடத்தும் முறையை முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கவனித்தார்கள்.மேலும், அரசுப்பள்ளியில் சமயலறை உள்ளிட்ட இடங்களிலும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்தார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…