திடீர் Twist… ‘ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு’ – பிரதீப் ஜான்!
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் இன்று(நவ.30) இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
சென்னை : வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் இன்று (நவ.30) இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவான ஃபெஞ்சல் புயல், மணிக்கு 13 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது தற்போது, சென்னையில் இருந்து 110 கிமீ தென் கிழக்கிலும், புதுச்சேரியில் இருந்து 120 கிமீ வடகிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.
இப்புயல் இன்று இரவு அல்லது நாளை விடிய காலை மகாபலிபுரத்துக்கும் காரைக்காலும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
முதலில் இன்று பிற்பகல் இந்த புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், அதன் வேகம் குறைபாடு, காற்றின் திசை மாறுபாடு காரணமாக தாமதமாகியுள்ளது. இந்நிலையில், தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், இந்த புயல் நாளை (டிச.1) கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மீண்டும் மேகக் கூட்டங்கள் உருவாகி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வலுக்கும், புயல் கடலில் இருக்கும் வரை மேகக் கூட்டங்கள் உருவாகி நிலப்பகுதியை நோக்கி வரும்” என்றார்.
Cyclone Fengal TWM Nowcast update 3 – Next band to bring rains now
————
Next band of clouds is developing rain should start in KTCC (Chennai) again. As long as cyclone is in sea, it will create clouds suddenly and push them towards land.Note Landfall might not happen… pic.twitter.com/qfDwGMlG4m
— Tamil Nadu Weatherman (@praddy06) November 30, 2024
மேலும் அவர், “புயல் கரையை நெருங்க தாமதமாக, தாமதமாக, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். மரக்காணம் – மாமல்லபுரம் இடையே புயல் கரையைக் கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்யும்” என தெரிவித்துள்ளார்.
Moderate intensity rains to continue in chennai central areas and new clouds will develop and move into city as long as Cyclone is there in the open sea. So on and off rains for central chennai.
Intense to very intense rains in Tiruvallur, Kancheepuram and chengalpet belts.… pic.twitter.com/NzkEd9ToLk
— Tamil Nadu Weatherman (@praddy06) November 30, 2024