அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளக்கம்.
அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதுவும், காணாமல் போன 113 ஆவணங்கள் சிபிசிஐடி போலீசார் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்திருந்தது. இதில் குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, அதிமுக அலுவலகத்தில் திருடினார்கள் என்பதே கூறுவது தவறு, அங்கு திருடுவதற்கு ஒன்றுமில்லை, ஏற்கனவே திருடி முடித்துவிட்டார்கள் என ஈபிஎஸ் தரப்பை கூறிய அவர், அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக இன்று வந்த தகவல் தவறானது, உண்மைக்கு புறம்பானது. சிபிசிஐடி போலீசார் எதையும் பறிமுதல் செய்யவில்லை, நாங்களே அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்து வந்த அனைத்து ஆவணங்களையும் வழக்கறிஞர் துணையுடன் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்துவிட்டோம் என தெரிவித்தார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…