திடீர் திருப்பம்.. அதிமுக அலுவலக ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது – புகழேந்தி

Default Image

அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளக்கம்.

அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதுவும், காணாமல் போன 113 ஆவணங்கள் சிபிசிஐடி போலீசார் மீட்கப்பட்டுள்ளதாகவும்,  மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்திருந்தது. இதில் குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, அதிமுக அலுவலகத்தில் திருடினார்கள் என்பதே கூறுவது தவறு, அங்கு திருடுவதற்கு ஒன்றுமில்லை, ஏற்கனவே திருடி முடித்துவிட்டார்கள் என ஈபிஎஸ் தரப்பை கூறிய அவர், அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக இன்று வந்த தகவல் தவறானது, உண்மைக்கு புறம்பானது. சிபிசிஐடி போலீசார் எதையும் பறிமுதல் செய்யவில்லை, நாங்களே அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்து வந்த அனைத்து ஆவணங்களையும் வழக்கறிஞர் துணையுடன் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்துவிட்டோம் என தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்