மதுரை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து! தீயணைப்பு பணி தீவிரம்!
மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை : மாவட்டம் புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் 3-வது மாடியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட உடன் அக்கம் பக்கத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்தும் தீயணைப்பு துறையினருக்கு தகவலை கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்து ஏற்பட்ட அந்த மாடியில் மருத்துவமனை இயங்கவில்லை எனவும் முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, நோயாளிகள் வேறு மாடிக்கு மாற்றப்பட்ட காரணத்தால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
திடீரென என்ன காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. எனவே, மருத்துவமனை தரப்பு தீ விபத்துக்கான காரணம் பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் தீ விபத்துக்கான காரணம் பற்றிய தகவல் மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.