தமிழகத்தில் திடீர் பரபரப்பு …!இன்று முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து…! பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட சிஐஎஸ்எப் வீரர்கள்…!

Default Image

இன்று  முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Image result for பழனிசாமி

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளார் 3வது நீதிபதி சத்யநாராயணன். 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார்.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பின்போது முதலமைச்சர் பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகிறார். தகுதிநீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆஜராகின்றனர்.சபாநாயகர் தரப்பில் ஆரியமா சுந்தரம், அரசு தலைமை கொறடா தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகவுள்ளனர்.
Related image

இதனால் 18 எம் எல் ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு இன்று காலை வரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.இதன் பின் முதலமைச்சருடனானஆலோசனைக்கு பிறகு, அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் . அமைச்சர்கள் எம்.சி.சம்பத், துரைகண்ணு உடன் உள்ளார்.
அதேபோல்  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளிக்கும் 3-வது நீதிபதி சத்தியநாராயணனின் நீதிமன்ற அறையில் பாதுகாப்புக்காக சிஐஎஸ்எப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கவில்லை.இன்னும் சில நிமிடங்களில்  தீர்ப்பு வெளியாகவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்