திடீரென பிரேக் போட்ட ஓட்டுநர் ! பேருந்தின் கூரையில் இருந்து மளமளவென விழும் மாணவர்கள் !
கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று சென்னையில் அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது.ஆனால் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் செனாய் நகர் புல்லா அவென்யூவில் 40 A என்ற மாநகர பேருந்தை சிறைபிடித்தனர்.பின்னர் பேருந்தை சிறைபிடித்த மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பேருந்தின் மேற்கூரை மேலே ஏறினார்கள்.பின்னர் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் பஸ் டே கொண்டாட்டத்திற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.
பஸ் டே விபரீதம் #BusDay pic.twitter.com/bpfVKPz098
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) June 18, 2019
மேற்கூரையில் கும்பலாக ஏறி விசில் அடித்து ஆட்டம் போட்டு வந்தனர். அப்போது முன்னே பைக்கில் சென்ற மாணவர் திடீரென பிரேக் போட்டதால் ,பேருந்து ஓட்டுனரும் திடீரென பிரேக் பிடித்தார்.இதனால் பேருந்தின் மேற்கூரையில் இருந்த மாணவர்கள் மளமளவென கீழே விழுந்தார்கள்.பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்த்துறை அந்த இடத்திற்கு வந்தனர்.பின்னர் அங்கிருந்த மாணவர்கள் தப்பியோடினார்கள்.ஒரு சில மாணவர்களை காவல்த்துறை பிடித்து எச்சரித்து அனுப்பிவிட்டனர்.பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில், மாணவர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்துள்ளன.