அதிமுகவுடன் திடீரென கூட்டணி !பாமக மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு

Published by
Venu

பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில்  பா.ஜ.க- பா.ம.க.-தே.மு.தி.க- த.மா.கா- புதிய தமிழகம் – புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றது.மேலும் இந்த கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் மக்களவை தேர்தலில் அதிமுக , பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது,பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது.இதனால் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை தலைவர் நடிகர் ரஞ்சித் நான் பாமகவில் இருந்து விலகுகின்றேன் என்று தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் 8-வழி சாலை என எத்தனை போராட்டங்கள் மக்கள் நடத்தினார்கள், இதை அவர்கள் நினைத்து பார்க்கவில்லை . 4 பேருக்கு என்னால் கூஜா தொக்க முடியாது என்று அவர் தெரிவித்தார் என்று கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

Image result for பொங்கலூர் மணிகண்டன்

இந்நிலையில் பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அவர் கூறுகையில்,  அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இது பாமகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Venu

Recent Posts

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…

19 minutes ago

மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…

57 minutes ago

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

1 hour ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

2 hours ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

3 hours ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

5 hours ago