இதுபோன்ற மரணங்கள் நெஞ்சை உறையச் செய்கிறது – ஜோதிமணி எம்.பி
கரூரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் நான்கு பேர் மரணமடைந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட்.
கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கரூரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் நான்கு பேர் மரணமடைந்த துயரநிகழ்வில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடும்பத்தினருக்கு உடனடியாக வீடு,வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற மரணங்கள் நெஞ்சை உறையச் செய்கிறது.
இழப்பீடுகளைத் தாண்டியும், குடும்பத்தினருக்கு என்றும் துணைநிற்போம். இதுபோன்ற துயரங்கள் நிகழாமல் தடுப்பது மிகவும் முக்கியம்.’ என பதிவிட்டுள்ளார்.
இழப்பீடுகளைத் தாண்டியும், குடும்பத்தினருக்கு என்றும் துணைநிற்போம். இதுபோன்ற துயரங்கள் நிகழாமல் தடுப்பது மிகவும் முக்கியம்.
— Jothimani (@jothims) November 17, 2022