நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம் ஆவார்.அமமுக நிர்வாகியாக உள்ள இவர் ஜவுளி கடை வைத்துள்ளார்.இவரது மகன் முகேஷ் கண்ணன் ஆவார்.
இவர் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.தற்போது இருவரும் சென்னையில் வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த காதல் விவகாரம் முகேஷு கண்ணனின் தந்தை நித்யானந்தத்திற்கு தெரியவந்துள்ளது.அந்த பெண்ணிடம் செல்போனின் பேசிய அவர் உன்னை என் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அது குறித்து உன்னிடம் பேச வேண்டும் என் வீட்டிற்கு தனியாக வா என்று அழைத்துள்ளார்.இந்நிலையில் கடந்த 28-ம் தேதி அந்த பெண் சென்னையில் இருந்து கிளம்பி நித்யானந்தத்தின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்ட நித்தியானந்தம்,வீட்டில் இருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் பலவந்தமான முறையில் கட்டியுள்ளார்.இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அவரை மிரட்டிய நித்தியானந்தம் 2 நாட்கள் வீட்டிலேயே அடைத்து வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.பின்பு அவுரிக்காட்டை சேர்ந்த தனது நண்பன் சக்திவேல் வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று அடைத்து வைத்துள்ளார்.
இதனிடையே இந்த விவகாரம் முகேஷ் கண்ணனுக்கு தெரிய வர அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவுரிக்காடு சென்று காதலியை மீட்ட அவர் ,தனது தந்தை கட்டிய தாலியை அறுத்து எறிந்துள்ளார்.இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த மகளீர் காவல்துறையினர் நித்தியானந்தம் ,அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் சக்திவேல் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணை முகேஷ்கண்ணன் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததால் தனது தந்தையால் அந்த பெண்பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அவரை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
இருப்பினும் அந்த பெண் மீது கொண்ட உண்மையான காதலினால் அந்த பெண்ணை கைவிடவில்லை.அவரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.அதன்படி நேற்று முன்தினம் இரவு ஒரு கோவிலில் ஊர்மக்கள் முன்னிலையில் அந்த பெண்ணை முகேஷ் கண்ணன் திருமணம் செய்துள்ளார்.
பின்னர் புதுமண தம்பதிக்கு ஊர் மக்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…