வெற்றிகரமாக முடித்த மாநாடு…தவெக தலைவர் விஜயின் அடுத்த அதிரடி முடிவு?
தவெக கட்சித் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது கடந்த அக்-27ம் தேதி வெற்றிகரமாக முடிவடைந்தது. அந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் மேடையில் உணர்ச்சி மிக்க பேசியது தமிழகத்தில் இன்று வரை பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
மேலும், அதில் விஜய் தொண்டர்களிடம், ‘நம் முதல் மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்தது, அதே போல அடுத்தடுத்த நிகழ்வுகளில் நாம் சிந்திப்போம்’ எனக் கூறி இருந்தார்.
இதனால், தவெக அடுத்ததாக என்ன செய்யப் போகிறது, விஜய் என்ன செய்யப் போகிறார் எனக் கேள்விகள் பலதும் எழுந்தது. தற்போது, அதற்கான விடை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, வரும் டிசம்பர் 27-ம் தேதி முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், இந்த சுற்றுப் பயணம் குறித்து ஆலோசிக்க நாளை பனையூரில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறப் போவதாகவும் தெரியவந்துள்ளது. அதே நேரம் இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது மாற்றுக்கட்சியிலிருந்து விலகியோரையும் சந்திக்கத் திட்டம் இடுவதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளைக் குறித்த பட்டியல் தயாராக இருக்கிறது எனவும் அது குறித்த விவாதம் மேற்கொண்டு மாவட்ட வாரியாக மக்களை (உள்ளூர்) சந்தித்து அவர்களிடம் கொள்கைகளை எடுத்துக் கூறி விஜய் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுற்றுப் பயணம் செல்வதற்கு எனவே பிரத்தியேக வாகனம் ஒன்றும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் விரைவில் தவெக தரப்பில் இது குறித்துச் செய்தி வெளியாகும் எனவும் கருதப்படுகிறது.