அணுசக்தி துறை, கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையம் அறிவிக்காமல் பெங்களூருவில் அறிவித்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி துறை, கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையம் அறிவிக்காமல் பெங்களூருவில் அறிவித்தது. இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், அணுசக்தி துறை எரிபொருள் வளாகம் தலைமை நிர்வாக அலுவலர் திருமிகு டாக்டர் ஆர். முருகையா அவர்களிடம் இருந்து மே 11, 2022 அன்று கடிதம் வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் வஞ்சனை குறித்து நான் எடுத்த பிரச்சினை ஒன்றில் தீர்வு கிட்டி இருக்கிறது.
ஒன்றிய அரசின் தேர்வு மையங்களில் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை குறிப்பிட்டு நான் 29.06.2021 இல் ஒரு கடிதம் எழுதி இருந்தேன். அணு எரி பொருள் வளாகம் (Nuclear Fuel Complex) 21.06.2021 வெளியிட்டு இருந்த அறிவிக்கை Stage | Priliminary (Screening) Test for the post of Stipendary Trainee Category – I, Post Code 21901- 21911. Advertisement No. NFC/02/2019 நியமன முதல்படித் தேர்வுக்காக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 6 மையங்களில் ஒரு மையம் கூட தமிழ்நாட்டில் இல்லை ; தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்கள் பெங்களூரில் போய் தேர்வெழுத வேண்டியுள்ளது என்று சுட்டிக் காட்டி இருந்தேன்.
உயர்கல்வி விகிதத்திலும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை ஒன்றிய அரசு இப்படித்தான் அணுகுமா?தமிழகத்திலும் ஒரு தேர்வு மையம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அணுசக்தி துறைக்கு கடிதம் எழுதி இருந்தேன்.அதற்கு வந்துள்ள பதில்தான் திருமிகு முருகையா அவர்களின் கடிதம் (Ref no. R1-14-1/2021/ R-1/1062). அவர் தெரிவித்துள்ள செய்தி இது.
“Techinical officer/D/Advt no NFC/01/2022 பதவிக்கான அறிவிக்கைக்கான தேர்வு மையம் ஜிர்கோனியம் வளாகம், பழைய காயல், தூத்துக்குடி மாவட்டம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு எழுத்துத் தேர்வும் நேர்காணலும் மே 5-7, 2022 தேதிகளில் அணு எரிபொருள் வளாகத்தால் நடத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” ஓராண்டு ஆனாலும் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் வஞ்சனைகளில் ஒன்றை சரி செய்ய முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…