பாமக மற்றும் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி – ராமதாஸ் ட்விட் ..!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக மாணவ மாணவியர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி ஆகியவை அரசு கல்லூரிகளாக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பது பாமக மற்றும் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி.
ஆனால், இதுமட்டுமே போதுமானதல்ல. அந்த கல்லூரிகளின் கட்டணம் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரிக்கு இணையாக குறைக்கப்பட வேண்டும். அதுவே மாணவர்களுக்கு முழுமையான மனநிறைவு அளிக்கும்!
— Dr S RAMADOSS (@drramadoss) January 29, 2021
ஆனால், இதுமட்டுமே போதுமானதல்ல. அந்த கல்லூரிகளின் கட்டணம் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரிக்கு இணையாக குறைக்கப்பட வேண்டும். அதுவே மாணவர்களுக்கு முழுமையான மனநிறைவு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.