ஹிந்தி அல்லாத மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி – சு.வெங்கடேசன் எம்.பி
ஹிந்தி அல்லாத மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை சு.வெங்கடேசன் எம்.பி பதிவு.
ஹிந்தி அல்லாத மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
Institute of Cost Accountants of India தலைவர் பி.ராஜு ஐயர் அவர்களிடம் இருந்து ஜனவரி 3, 2022 தேதியிட்ட பதில் வந்துள்ளது.
ICAI (inter) தேர்வு அறிவிக்கையின் 13வது அம்சம் ‘இந்தி வழி தேர்வர்களுக்கு மட்டும் எழுத்து பூர்வமான விடைத்தாள் (Physical answer sheet) இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு இந்தி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் என்று அழுத்தமாக கூறப்பட்டு இருந்தது.
ஆங்கில வழி தேர்வர்கள் தட்டச்சு வாயிலாகவே பதில்களை அளிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். தட்டச்சு செய்ய நேரம் எடுக்கலாம் என்பதால் அது மதிப்பெண்களை குறைக்கும் என்று அச்சமடைந்தனர். இப் பின்புலத்திலேயே நான் ஐ.சி.ஏ.ஐ தலைவருக்கு 27.12.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.
தற்போது ஐ.சி.ஏ.ஐ தலைவரின் கடிதத்தின் படி ஆங்கில வழி தேர்வர்களும் பிரிவுகள் B, C, D ஆகிய கேள்விகளுக்கான பதில்களை தட்டச்சு வாயிலாகவோ, எழுத்து பூர்வமாகவோ தர இயலும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கையின் விதிமுறை எண் 13 இல் இருந்த குழப்பத்திற்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் எல்லா தேர்வு மையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு தேர்வர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன்.
இதனால் இந்தி- ஆங்கிலம் இரு மொழி தேர்வர்களுக்கும் சம வாய்ப்பு. குழப்பத்தை நீக்கி ICAI தலைவர் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார் என்றும் இது ஹிந்தி அல்லாத மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.
ஹிந்தி அல்லாத மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி.
CMA (Inter) தேர்வுகளில்
இந்தி- ஆங்கிலம் இரு மொழி தேர்வர்களுக்கும் சம வாய்ப்பு.குழப்பத்தை நீக்கி
ICAI தலைவர் விளக்க கடிதம். @ICAICMA #Exam #Students pic.twitter.com/M8zpQ569ck— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 5, 2022