கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தளபதியின் தொடர்ந்த முயற்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி என ட்வீட்.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இந்த அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளை பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி, இதுகுறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதா குறித்து விவாதித்து, சில நாட்களிலேயே குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதற்கு மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மசோதா தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து தாமதிக்காமல் சட்டமுன்வடிவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து சட்ட முன்வடிவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன் என்றார்.
இதன்பின் அனைத்துக்கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து குடியரசு தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த தொடர் முயற்சிகளின் பலனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த நீட் விலக்கு மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற ஏதுவாக தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார் என முதலமைச்சர் பேரவையில் தெரிவித்தார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தளபதியின் தொடர்ந்த முயற்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…