சென்னையில் விரைவில் புறநகர் ரயில் சேவை துவங்கப்படும் – ரயில்வே துறை டிஜிஇ!
சென்னையில் விரைவில் புறநகர் ரயில் சேவை துவங்கப்படும் என ரயில்வே துறை டிஜிஇ அருள்ஜோதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து உடல் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய சத்து மாத்திரை பழங்கள் ஆகியவை கொடுத்து ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி பிரேந்திர குமார் அவர்கள் வரவேற்றுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பிரேம்குமார் கொரோனாவால் உயிரிழந்த ரயில்வே துறையை சேர்ந்தவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய டிஐஜி அருள்ஜோதி அவர்கள் சென்னை மாநகரில் விரைவில் புறநகர் ரயில்சேவை துவங்கும் எனவும் அப்படி துவங்கும் பொழுது பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.