அக்டோபர் 5 முதல் புறநகர் ரயில் சேவை – தெற்கு ரயில்வே..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், தமிழகத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சிறப்பு ரயில்கள் இயங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அக்டோபர் 5-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைகாட்டி பயணிக்கலாம் எனவும் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.