சென்னை மெட்ரோ சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை இணைப்பு!

Madurai Metro

சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்பட உள்ளது. சென்னை மாநகரப் பகுதிகளில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மெட்ரோ ரயில் நிலையங்களைப்போல, சென்னை புறநகர் பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.

இதன் விரிவாக்கம் பணி கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.495 கோடி செலவில் தொடங்கப்பட்டது, தற்போது இதன் பணிகள் முடிவடைந்துள்ளன. இதில், மந்தைவெளி, கோட்டூர்புரம், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி உள்பட 9 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்