#BreakingNews : 7-ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்சேவையா ? தெற்கு ரயில்வே விளக்கம்

Default Image

சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்குவது குறித்த செய்தி முற்றிலும் தவறானது.

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, வரும் 7ஆம் தேதி முதல் ரயில்களை இயக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .

இந்நிலையில் சென்னையில் வரும் 7-ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்சேவை தொடங்கும் என செய்திகள் வெளியானது .தற்போது சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்குவது குறித்த செய்தி முற்றிலும் தவறானது. தெற்கு ரயில்வே இதுபோன்ற எந்த செய்தியையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்