சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக பாதிப்பு.
சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக பாதிப்படைந்துள்ளது. ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எண்ணூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், எண்ணூர் ரயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை பாதிப்பால், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.