பேனர்விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது 304(A), 279, 336 ஆகிய பிரிவுகளில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவான 308-ன் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் தற்போது வரை அவர் கைது செய்யப்படவில்லை.ஜெயகோபால் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.
தலைமறைவான ஜெயகோபாலை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை போலீசார் கைது செய்துள்ளனர்.கிருஷ்ணகிரியில் வைத்து ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…