கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இது தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.மேலும் அவரது உறவினர் மேகநாதன், லாரி டிரைவர் மனோஜ் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜெயகோபாலுக்கு நிபந்தனைகளின் பெயரில் ஜாமீன் வழங்கப்பட்டது.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை ரவி தொடர்ந்த வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.அப்பொழுது ,ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கின் விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…