பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஆனால் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் அவரை கைது செய்யவில்லை.சுபஸ்ரீ தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் ஜெயகோபாலை கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.இதன் பின்னர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை தீவிரமாக தேடி வந்த நிலையில் ஓசூர் அருகே தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்த நிலையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக பழனி(50), சுப்பிரமணி(50) சங்கர்(35), லட்சுமிகாந்த்(38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் 4 பேரும் பேனரை வைத்ததாக கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட ஜெயகோபாலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கைது என தகவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.4 பேரை கைது செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…
மெக்சிகோ: புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார். இவரது மறைவு WWE-ன்…
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…