சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அரசு பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம்.
சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக இளைய தலைமுறை அமைப்பை சேரந்த தமிழ் மணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இதில் சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.இந்த வழக்கை நீதிபதி ரமேஷ் என்பவர் விசாரித்தார்.அப்போது தமிழக அரசு தரப்பில் இது தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும் பதில் அளிக்க அவகாசம் கோரியது அரசு தரப்பு.
ஆனால் சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.மேலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அரசு நாளை மறுநாள் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…